72அடி உயரத்தில் சிக்கிய 8 பேர்; பிரித்தானியாவில் பரபரப்பு சம்பவம்
இங்கிலாந்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டர் உச்சியில் சிக்கிய 8 ரைடர்கள் மீட்கப்பட்டனர்.எட்டு வயது சிறுமி உட்பட 8 ரைடர்கள் மீட்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டனில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள அட்வென்ச்சர் தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
72 அடி உயரத்தில் பயணிகள் சிக்கினர். மீட்புப் பணியாளர்கள் பிளாட்பார்ம் லிஃப்டை பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அவர்கள் குறைந்தது அரை மணி நேரம், 45 நிமிடங்கள் அவர்கள் உச்சியில் சிக்கித் தவித்ததாக நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறியுள்ளார். நிலைமையை பூங்கா நன்றாக கையாண்டதாகவும், எல்லாம் மிகவும் அமைதியாக இருந்தது என்று அந்த நபர் கூறினார்.
(Visited 19 times, 1 visits today)





