79 வயதான ட்ரம்பின் இதய வயது 65 – மருத்துவர்கள் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மிகச் சிறந்த உடல்நிலையில் இருப்பதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ட்ரம்பின் உண்மையான வயதைவிட அவரது இதய வயது 14 ஆண்டுகள் குறைவாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ட்ரம்ப் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.
அது அவரது தொடர்ச்சியான சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆய்வுக்கூடச் சோதனைகள், நிபுணத்துவ மருத்துவர்கள் மேற்கொண்ட சுகாதார மதிப்பீடுகள் போன்றவை இடம்பெற்றன.
அவரது இதய நலனும் ஒட்டுமொத்த உடல்நலனும் சிறந்த நிலையில் தொடர வேண்டும் என்பதற்காக மருத்துவ ஆலோசகர்களுடன் இணைந்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ட்ரம்ப் தனது அடுத்தக்கட்ட சர்வதேச பயணத்திற்குத் தயாராகி வருகின்றார். வருடாந்திர சளிக்காய்ச்சல் தடுப்பூசி, புதுப்பிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசி ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
79 வயதான ட்ரம்ப் கடந்த ஜனவரியில் மீண்டும் பொறுப்புக்கு வந்தார். அமெரிக்காவில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மிக வயதானவர் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.