சிங்கப்பூரில் 74 வயது பெண்ணுக்கு 88 வயது முதியவரின் கொடூர செயல்

சிங்கப்பூரின், புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் 74 வயது பெண்ணைக் கொன்றதாக 88 வயது முதியவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரிடாவி மொசூடின் என்ற அந்த முதியவர் மீது கொலை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் இருக்கும் பெத்தீர் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவம் குறித்து நேற்று பின்னிரவு சுமார் 1 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். அந்தப் பெண் உயிரிழந்து காணப்பட்டார்.
ரிடாவி சம்பவம் நடந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்கப்படலாம்.
(Visited 15 times, 1 visits today)