இலங்கையில் ஐந்து வருடங்களில் 73 ஆயிரம் பேர் வேலையிழப்பு

கடந்த 05 வருடங்களில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் பணியாற்றிய 73 ஆயிரத்து 440 பேர் வேலை இழந்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒன்றிணைந்த தொழிலாளர் சட்ட அமைப்பை தயாரிப்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் சுருக்கம் ஜூன் 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கு தெரிவித்தார்.
அமைச்சர் நாணயக்கார தலைமையில் நேற்று மாலை தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய தொழிலாளர் சட்ட அமைப்பை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒவ்வொரு வாரமும் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறுவதாகவும் அதற்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளின் சுருக்கத்தை சமர்ப்பித்ததன் பின்னர் வரைவு சட்டமூலத்தை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.