செய்தி வட அமெரிக்கா

கனடாவிலிருந்து வெளியேற்றப்படும் 7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள்

கனடா நாட்டில் பல லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் படித்து வருவது அனைவருக்கும் தெரியும்.

அவர்களில் சுமார் 7 லட்சம் பேரின் பெர்மிட் அடுத்தாண்டு உடன் காலாவதியாகும் நிலையில், அவர்கள் கனடா நாட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் அங்குள்ள இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

கனடாவில் கடந்த சில மாதங்களாகவே மிகவும் குழப்பமான சூழல் நிலவுகிறது.

ஒரு பக்கம் இந்தியா மீது தொடர்ச்சியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி வருகிறார்.

மறுபுறம் அங்கு உள்நாட்டிலேயே பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே கனடாவில் வசிக்கும் பல லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அடுத்தாண்டு அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அங்கு வசிக்கும் சுமார் 50 லட்சம் பேரின் தற்காலிக பெர்மிட் அடுத்தாண்டு இறுதியில் காலாவதியாகிறது. அவர்கள் அனைவரது பெர்மிட்களையும் கனடா புதுப்பிக்காது என்றே தெரிகிறது.

இதன் காரணமாக விசா காலாவதியாகும் பலரும் தானாகவே கனடா நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றே எதிர்பார்ப்பதாகத் தகவலை குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார்.

இத்தனை பேரின் விசாக்கள் ஒரே காலகட்டத்தில் காலவதியாகும் நிலையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைக் கனடா அரசு எப்படி உறுதி செய்யும் என்ற கேள்விகளையும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.

இது தொடர்பாக மில்லர் கூறுகையில், “பல லட்சம் பேரின் விசா பெர்மிட்டுகள் காலாவதியாவது உண்மை தான்.

ஆனால், அதற்காக அவர்கள் அனைவரும் கனடா நாட்டை விட்டு வெளியேறியே தீர வேண்டும் என்ற அவசியமில்லை.

சிலர் தங்கள் விசாவை புதுப்பிப்பார்கள். சில மாணவர்கள் வேலை பெர்மிட் கோரி விண்ணப்பிப்பார்கள்.

தேவையான ஆய்வுக்குப் பிறகு இந்த பெர்மிட்டுகள் நீட்டிக்கப்படும்” என்றார்.

50 லட்சம் பேரின் பெர்மிட்டுகள் காலாவதியாகும் நிலையில், அதில் சுமார் 7.66 லட்சம் பெர்மிட்டுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குச் சொந்தமானதாகும்.

அங்குக் கடந்த சில மாதங்களாகவே மிகப் பெரியளவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் அதிகம் பாதிப்பது அந்த மாணவர்கள் தான்.

இதே நிலை நீடித்தால் அடுத்தாண்டு இந்த 7 லட்சம் பேரும் கனடாவை விட்டு வெளியேற வேண்டும்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!