செய்தி

இந்தியாவில் குஜராத் கடற்பகுதியில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 8 ஈரானியர்கள் கைது

இந்தியாவுக்குள் கடத்தப்படவிருந்த 700 கிலோகிராம் ‘மெத்தம்ஃபெட்டமின்’ போதைப்பொருளைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, கடற்படை, குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவை இணைந்து இதில் ஈடுபட்டன,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

இந்நிலையில், அரசாங்க அமைப்புகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு உள்ளதை இது காட்டுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி