கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை

கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்க முன்மொழிவுகளைத் தயாரிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் அவர் தெரிவித்துள்ளார்.
அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளிநாடு செல்லும் மக்களிடமிருந்து பட்டப்படிப்பிற்காக அரசாங்கம் செலவிடும் தொகையை மீளப்பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 18 times, 1 visits today)