ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை அருகே 7 பேர் கைது
ஆஸ்திரேலியாவில்(Australia) போண்டி(Bondi) கடற்கரை தாக்குதல் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் மத்தியில், சிட்னி(Sydney) புறநகர்ப் பகுதியில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“வன்முறைச் செயல் திட்டமிடப்பட்டிருக்கலாம்” என்ற ரகசிய தகவலைப் பெற்ற பின்னர், இரண்டு கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டு குறித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில(New South Wales State) காவல் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , தீவிர விசாரணைக்கு “கைது செய்யப்பட்டவர்களுக்கு போண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 14ம் திகதி மாலையில் பாண்டி கடற்கரையில் நடந்த யூத எதிர்ப்புத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.





