ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான்(Afghanistan) தலைநகர் காபூலில்(Kabul) நடந்த குண்டுவெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
ஷாஹர்-இ-நாவ்(Shahr-e-Naw) வணிகப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் குண்டுவெடிப்பு நடந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வணிக பகுதியில் பெரிய அலுவலக கட்டிடங்கள், ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் தூதரகங்கள் உள்ளன.
“காபூலில் உள்ள எங்கள் அறுவை சிகிச்சை மையத்தில் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஷாஹர்-இ-நாவ் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து இருபது பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏழு பேர் வருகையிலேயே உயிரிழந்துவிட்டனர்” என்று ஆப்கானிஸ்தான் தலைநகரில் மருத்துவமனையை நடத்தும் இத்தாலிய அரசு சாரா அவசரநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.




