இலங்கை

இலங்கையில் 62 டெங்கு அபாய வலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

இலங்கையில் 62 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

கடந்த மே மாதத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், டிசெம்பர் மாதத்தில் எட்டாயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

மேலும், டெங்கு இறப்பு மற்றும் சிக்கல்களை குறைக்க, இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள மருத்துவர் அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், சுவாச நோய் பரவாமல் தடுக்க, வாய் முகமூடி அணிவது, அடிக்கடி கைகளை கழுவுதல், இருவருக்கு இடையிலான இடைவெளியை அதிகரிப்பது அவசியம் என சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

கொவிட் ஜேஎன்-1 தொடர்பில் பாரிய ஆபத்து எதுவும் இல்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால மேலும் தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!