ஸ்பெயின் ரயில் விபத்தில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த 06 வயது சிறுமி!
ஸ்பெயின் ரயில் விபத்தில் சிக்கி ஏறக்குறைய 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 06 வயது சிறுமி ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாட்ரிட் (Madrid) நகரில் லயன் கிங் (Lion King) இசை நாடகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இதில் மேற்படி சிறுமியின் பெற்றோர், 12 வயதுடைய அண்ணன் மற்றும் உறவினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி தலையில் அடிப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக உள்ளதாக கூறுப்படுகிறது.
மேலும் தற்போது இந்த சிறுமி தாத்தா, பாட்டியுடன் கோர்டோபாவில் (Cordoba) உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
ஸ்பெயின் ரயில் விபத்து – இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்கள்!! மீட்கமுடியாமல் தவிப்பு!





