பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்கள் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள லதா தெஹ்சில் மிஷ்தா கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது..
(Visited 20 times, 1 visits today)





