இலங்கையில் 6 பேருக்கு மரணதண்டனை விதிப்பு!

இருபது வருடங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை பகுதியில் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (23) மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை கொன்னொருவ மற்றும் கட்டன்வெவ பிரதேசங்களைச் சேர்ந்த சமன் புலத்கம, லலித் பிரசன்ன, ரணசிங்க ஆராச்சிகே ஜினதாச, ஹேவா ஹல்பகே வசந்த, திலான் மஞ்சுள மற்றும் எச்.எம்.நவரத்ன ஆகிய ஆறு பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2003 ஆண்டு ஏப்ரல் 14 ஈம் திகதியன்று ஹம்பாந்தோட்டை, கட்டன்வெவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமாகாத விஜேசிங்க கங்கணம்கே நந்ததிஸ்ஸ என்பவரை மரக் கட்டைகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தார்கள் என இவர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
(Visited 17 times, 1 visits today)