லாவோஸில் நச்சுத்தன்மையுள்ள காட்டுக் காளான்களால் 6 பேர் மரணம் – மக்களுக்கு எச்சரிக்கை
லாவோஸில் நச்சுத்தன்மையுள்ள காட்டுக் காளான்கள் உயிரை பறிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவற்றைச் சாப்பிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காளானை உண்டதும் அவர்களுக்குத் தலைவலி, வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
காட்டில் வளரக்கூடிய காளான்கள், இதர நச்சுத்தன்மை மிக்க உணவு வகைகளாகும்.
இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டிய அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.





