இலங்கையில் பெண் ஒருவருக்கு 6 ஆண் குழந்தைகள்!

இலங்கை பெண் ஒருவர் ஆறு ஆண் குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.
ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.
ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.
இலங்கையில் கடைசியாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் திகதி ஆறு குழந்தைகள் பிறந்தன.
அன்று மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன.
(Visited 130 times, 1 visits today)