செய்தி தமிழ்நாடு

500 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3 கோட்டாச்சியர் அலுவலகம் மற்றும் 11 வட்டாச்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்.

தமிழகம் முழுதும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர், வருவாய்த்துறையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பதவி இறக்கும் செய்யப்பட்ட துணை வட்டாச்சியரின் பதவி உயர்வு ஆணைகளை விரைந்து வழங்க வேண்டும், வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு

அரசாணை வெளியிட வேண்டும் எனும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது, இதனையடுத்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் கூறுகையில்

வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த மாதம் நடைபெறும் மாநில மையக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறினார்

 

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி