ஒருவாரத்தில் 500 பேர் ஆங்கில கால்வாயை கடந்துள்ளனர் : பிரித்தானியா வெளியிட்ட தகவல்!

கிட்டத்தட்ட 500 புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்ததாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒன்பது படகுகளில் 492 பேர் கடந்து சென்றதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஒரு வாரத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கானோர் குறித்த கால்வாயை கடந்துள்ளனர்.
அறிக்கையின்படி, கடந்த புதன்கிழமை 107 பேரும், திங்கள்கிழமை 125 பேரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 703 பேரும் கடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏழு நாட்களில் மொத்தம் 1,427 பேர் கடக்க முயற்சி செய்துள்ளதாகவும், கடந்த ஒரு வருடத்தில் 19,066 பேர் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 15 times, 1 visits today)