வாழ்வியல்

சிறுநீரகம் செயலிழப்பதற்கான 5 முக்கிய காரணங்கள்

சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புக்களில் ஒன்று. சிறுநீரகம் செயலிழந்தால், உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

உடலில் இரத்தத்தை சுத்தம் செய்யவும், நச்சுக்களை அகற்றவும், நீர் மற்றும் தாதுக்களின் சமநிலையை பராமரிக்கவும் செயல்படும் உறுப்பான, சிறுநீரகம் வேலை செய்யாமல் போனால், ​​அது ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக உருவெடுக்கும்.

சிறுநீரக செயலிழப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில மிகவும் பொதுவான காரணங்கள். சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும் 5 முக்கிய பொதுவான காரணங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள்

1. அதிகப்படியான மருந்து உட்கொள்ளல் (Side Effects Of Excess Pain Killers And Antibiotics)

நம்மில் பலருக்கு மருத்துவரை ஆலோசிக்காமல், வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது ஸ்டீராய்டுகளை அதிக காலம் தொடர்ந்து உட்கொள்ளும் வழக்கம் உள்ளது. இது சிறுநீரகங்களில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வலி நிவாரணிகள் மற்றும் இதர மருந்துகள் சிறுநீரக செல்களை சேதப்படுத்தி, அதன் செயல்பாட்டை பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி நீண்ட காலத்திற்கு எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். இயற்கையாக குணப்படுத்த, வீட்டு வைத்திய முறைகளுக்கு (Health Tips) சிறிது முன்னுரிமை கொடுங்கள்.

2. போதுமான தண்ணீர் எடுத்துக் கொள்ளாத நிலை ( SIde Effects Of Not Drinking Enough Water)

கடகத்திற்கு செல்லும் செவ்வாய்… ஏப்ரலில் 5 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது
தமிழ் புத்தாண்டு ராசிபலன்! இந்த 5 ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்!
சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட போதுமான அளவு தண்ணீர் தேவை. உடலில் தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும்போது, ​​நச்சுக்களை அகற்றும் செயல்முறை பாதிக்கப்பட்டு, சிறுநீரகங்களின் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கலாம். கோடை காலத்தில் அதிக தண்ணீருடன், எலக்ட்ரோலைட்ஸ் அதிகம் கொண்ட இளநீர், பழச்சாறுகள், நீர்மோர் ஆகியவற்றை அடிக்கடி அருந்த வேண்டும்.

3. உயர் இரத்த அழுத்தம் (Side Effects Of High BP)

ஹை பிபி அல்லது உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். சிறுநீரகத்திற்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காத போது, படிப்படியாக பலவீனமடைந்து செயலிழக்கும் நிலை உருவாகிறது. பிபி கட்டுக்குள் உள்ளதா என்பதை கண்காணிக்க வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். உப்பு உட்கொள்ளலைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்.

4. நீரிழிவு நோய் (Side Effects Of Diabetes)

சிறுநீரக செயலிழப்புக்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, ​​சிறுநீரகக் குழாய்கள் சேதமாகி, படிப்படியாக சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி கண்காணிப்பதும் அவசியம்.

5. சிறுநீரக தொற்றுகள் மற்றும் சிறுநீரக கற்கள் (Kidney Related Issues)

சிறுநீரகத்தில் தொற்று அல்லது கற்கள் காரணமாக சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படலாம். தொடர்ச்சியான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) மற்றும் சிறுநீரக கற்கள் காலப்போக்கில் சிறுநீரகங்களை பலவீனப்படுத்தும். தொற்றுகளைத் தவிர்க்க உடல் தூய்மையில் கவனம் செலுத்துவது அவசியம். அதிக தண்ணீர் குடிக்கவும்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான