ஆசியா

சீனாவின் பிரபலமான சுற்றுலாத் தலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி, 24 பேர் காயம்

சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலா நகரம் ஆகும். மலைகள் நிறைந்த அந்த பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஏறி நின்று இயற்கை அழகை ரசிப்பதற்காக ஏராளமானோர் அங்கு செல்வது வழக்கம். அந்தவகையில் நேற்று சுற்றுலா பயணிகள் பலர் அங்கு சென்றிருந்்தனர்.

அப்போது அந்த பாலத்தின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால் பாலத்தின் மீது நின்றவர்கள் ஆற்றங்கரை அருகே கற்கள் நிறைந்த பகுதியில் விழுந்தனர். மீட்பு படையினர். அங்கு செல்வதற்குள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 24 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் பலியானோருக்கு சீன அதிபர் ஜின்பிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்த பாலம் அறுந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரிய வந்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!