டெக்சஸ் வெள்ளத்தில் 43 பேர் மரணம் – பணியில் அமெரிக்க மீட்புக் குழுவினர்

டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43க்கு உயர்ந்துள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை அடையாளம் கண்டு மீட்க அமெரிக்க மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.
அவர்களில் 28 பெரியவர்களும் 15 சிறுவர்களும் அடங்குவர். கோடை முகாமிலிருந்த 27 பெண் பிள்ளைகள் உட்பட பலரைக் காணவில்லை.
தேடல் மீட்பு நடவடிக்கை தொடரும் என டெக்சஸ் ஆளுநர் கிரெக் அபொட் குறிப்பிட்டுள்ளார்.
கடலோரக் பொலிஸார் மீட்பு நடவடிக்கையில் உதவுகின்றனர். பேரிடரைச் சமாளிக்க மாநில அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகச் சொல்கிறது வெள்ளை மாளிகை.
சுமார் 850 பேர் பத்திரமாய் வெளியேற்றப்பட்டனர். ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. Guadalupe ஆற்றில் 45 நிமிடங்களில் நீர் மட்டம் 8 மீட்டர் உயர்ந்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
மத்திய டெக்சஸில் வீடுகளும் நிறுவனங்களும் வெள்ளத்தில் நாசமாயின. கோடை முகாமில் சுமார் 750 பிள்ளைகள் சேர்ந்தனர். அவர்களில் 27 பேரைக் காணவில்லை. முகாம் ஆற்றின் கரையில் இருந்தது. நால்வர் உயிரிழந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
இன்றும் மழை பெய்யலாம் என்பதால் அபாயம் தொடர்வதாய் முன்னுரைத்துள்ளது வானிலை ஆய்வகம்.