நியூசிலாந்து பாராளுமன்றம் முன் ஒன்றுக்கூடிய 42000 பேர்!
மாவோரியின் உரிமைகளுக்கு எதிராக கொண்டுவரப்படும் மசோதா ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான நியூசிலாந்து மக்கள் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் முன் ஒன்றுக்கூடியுள்ளனர்.
குறித்த மசோதாவானது மாவோரியின் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்ய முயல்கிறது என்றும் இன உணர்வுகளை அச்சுறுத்துவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் மற்றும் பூர்வீக மௌரிகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட 184 ஆண்டுகள் பழமையான ஒப்பந்தத்தை மறுவிளக்கம் செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கெதிராக ஏறக்குறைய 42000 போராட்டக்காரர்கள் ஒன்றுக்கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
லிபர்டேரியன் ACT நியூசிலாந்து கட்சி, ஆளும் மைய-வலது கூட்டணி அரசாங்கத்தின் இளைய பங்காளியாகும், இது பழங்குடியினரல்லாத குடிமக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறும் Waitangi உடன்படிக்கைக்கு ஒரு குறுகிய விளக்கத்தை அளிக்க முயல்கிறது.