எகிப்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட 4,100 ஆண்டுகள் பழமையான மந்திரவாதி மருத்துவரின் கல்லறை!
துடிப்பான சுவர் ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகளால் நிரப்பப்பட்ட 4,100 ஆண்டுகள் பழமையான கல்லறை எகிப்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சக்காராவின் (பண்டைய எகிப்திய நகரமான மெம்பிஸின் நெக்ரோபோலிஸின் ஒரு பகுதி) புதைகுழியில் இந்த கல்லறை கண்டறியப்பட்டுள்ளது.
பிரெஞ்சு-சுவிஸ் குழு, சூளை கல்லறை பண்டைய எகிப்தின் மிகவும் சக்திவாய்ந்த மன்னர்களில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த ஒரு ‘மந்திர’ மருத்துவர் மற்றும் பாதிரியாருக்கு சொந்தமானது என்று நம்புகிறது.
டெட்டின்பெஃபோ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள குறித்த கல்லறை டெட்டின்பெஃபோ ஒரு பிரபலமான மந்திரவாதி மருத்துவருக்கு சொந்தமானது. அவர் ஆறாவது வம்சத்தின் இரண்டாம் பெப்பி மன்னரின் ஆட்சிக் காலத்தில் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உள்ளே நுழைந்து ‘பிரகாசமான, புதிய வண்ணங்களில்’ சுவர் ஓவியங்களைக் கண்டுபிடித்தனர், அவை அவற்றின் வயது இருந்தபோதிலும் நல்ல நிலையில் இருந்தன.
ஒரு கல்வெட்டு மருத்துவரை ‘செர்கெட் தெய்வத்தின் மந்திரவாதி’ என்று விவரித்தது, அதாவது பண்டைய புராணத்தின் படி, தேள்கள் மற்றும் பாம்புகளின் விஷக் கொட்டுதல்கள் மற்றும் கடிகளை அவர் ‘குணப்படுத்தியிருக்கலாம்’ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.