இலங்கையில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள்!

4000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மேல் மாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மேல்மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.
(Visited 20 times, 1 visits today)