ரஷியா தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 400 பேர் கொன்று குவிப்பு
உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷியா ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகளை வீசியும், கவச வாகனங்களை கொண்டு இந்த பயங்கர தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் இந்த போரில் ஒரே நாளில் 400 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷியா ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான 2 டாங்கிகள், 11 கவச வாகனங்கள் ஆகியவற்றையும் தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது.





