இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் கோரி அமெரிக்காவின் 40 துறைசார் அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகத்தில் உள்ள 40 துறைகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த நானூறு அரசாங்க அதிகாரிகள் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் கோரும் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தக் கடிதத்தை முதலில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை, வெள்ளை மாளிகை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
“போர்நிறுத்தத்தை அவசரமாக கோருமாறு ஜனாதிபதி பைடனை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும், இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை உடனடியாக விடுவிப்பதன் மூலம் தற்போதைய மோதலைத் தணிக்க அழைப்பு விடுக்கிறோம் எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜோ பைடனும் மற்ற உலகத் தலைவர்களும் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான அழைப்புகளை பின்னுக்குத் தள்ளி, அது ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று கூறினர்.
இதற்கிடையே ஜோ பைடனின் நிர்வாகம் அதற்குப் பதிலாக இஸ்ரேல் ஒப்புக்கொண்ட சண்டையில் மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.