செய்தி

சீனாவில் நச்சுணவுக்கு 40 நாய்கள் பலி; செல்லப்பிராணிகளுக்கு முகக்கவசம்

சீனாவில் நச்சுணவுக்கு 40 நாய்கள் பலியானதைத் தொடர்ந்து உரிமையாளர்கள் தங்களுடைய செல்லப்பிராணிகளுக்கு முகக்கவசங்களைப் போட்டு பாதுகாத்து வருகின்றனர்.

நவம்பர் 16ஆம் இகதி குவாங்டோங் செல்லப் பிராணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நச்சுணவுக்கு செல்லப் பிராணிகள் பலியானதாக பல புகார்கள் வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவாங்ஷோவில் பாயுன், ஹாய்ஷு, பான்யு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்துள்ளன.

இதன் காரணமாக அவசரகால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கியிருக்கிறது என்று சங்கம் தெரிவித்தது.

நச்சுணவு சம்பவங்களில் உண்மையைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சங்கம் கூறியது.

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!