கொல்கத்தா அருகே கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது குழந்தை
கொல்கத்தா அருகே உள்ள ஹூக்ளியில்(Hooghly), தனது பாட்டியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாரா(Banjara) சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குழந்தை, தாரகேஷ்வரில்(Tarakeshwar) உள்ள ரயில் நிலையம் அருகே கொசு வலையின் கீழ் ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர் குழந்தையின் கொசு வலையை வெட்டி கடத்தி சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட மறுநாள் குழந்தை தாரகேஷ்வர் ரயில்வே உயர் வடிகால் அருகே துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தாரகேஸ்வர் கிராமின் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தாரகேஷ்வர் காவல்துறை தெரிவித்துள்ளது.




