இலங்கை

இலங்கையில் மேலதிக வகுப்பிற்கு சென்று காணாமல் போன 4 மாணவர்கள்..

மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய 3 பாடசாலை மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் 16 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டம் ஒன்றில் வசிப்பவர்கள் எனவும் கடந்த 14 ஆம் திகதி முதல் இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை முடிந்த வீடு திரும்பிய இம் மாணவர்கள் மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி, மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினர்.

இவ்வாறு சென்ற பிள்ளைகள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.காணாமல் போன 4 மாணவர்களும் உறவினர்கள் ஆவர்.

11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய 3 சிறுமிகளும், 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!