ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 4 வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ லாரி ஒன்று சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
SK Payen பகுதிக்கு அருகில் ஏற்பட்ட இந்த விபத்தில் மோசமான வானிலை காரணமாக நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோசமான வானிலை காரணமாக இந்திய ராணுவத்தின் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தது. காயமடைந்த வீரர்கள் காஷ்மீர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக வெளியேற்றப்பட்டனர், இதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்”
“துரதிர்ஷ்டவசமான விபத்தில் மூன்று துணிச்சலான இதயங்கள் உயிரிழந்தன. இந்திய ராணுவம் உயிரிழந்த குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது” என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, மற்றொரு சிப்பாய் காயங்களால் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.