இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபர்கள் இந்திய விமான நிலையத்தில் கைது!
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இந்திய குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) நான்கு ISIS பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்துள்ளது,
அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் என்று இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்காக அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கைது நடவடிக்கையின் எதிரொலியாக அகமதாபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று ஐபிஎல் அணிகள் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





