செய்தி தமிழ்நாடு

36 செயற்கைக்கோள்களுடன் LVM-3 ராக்கெட் விண்வெளிக்கு சீறி பாய்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் மனோஜ். இவர் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் வானவில் மன்ற போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஏழு நாட்களாக மாநில அளவிலான போட்டி சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாணவன் மனோஜ் அதிலும் வெற்றி பெற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று கடந்த 26ம் தேதி 36 செயற்கைக்கோளுடன் எல்விஎம் 3  ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்ததை நேரில் பார்த்தும் அதன் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் அவர் படிக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து பள்ளிக்கு திரும்பிய மாணவன் மனோஜ்க்கு பள்ளி ஆசிரியர்கள் சக நண்பர்கள் கிராம மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக வானவில் மன்ற போட்டியை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள், பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!