பிரான்ஸில் ஒரே இரவில் பதிவாகிய 33,000 மின்னல்கள்
பிரான்ஸில் ஒரே இரவில் 33,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியதாக செய்தி வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை ஒரே நாள் இரவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று முன்தினம் முழுவதும் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த மழை பெய்திருந்தது.
பலத்த மின்னல் தாக்குதல்களும் சில இடங்களில் புயல் காற்றும் பதிவாகியிருந்தது.
மொத்தமாக 33,686 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக இதனைக் கண்காணிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.





