மத்திய மெக்சிகோவில் கண்டெடுக்கப்பட்ட 32 உடல்கள் – தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

மத்திய மெக்சிகன் மாநிலமான குவானாஜுவாடோவில் Irapuato என்ற பகுதியில் 32 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ நகரத்திலிருந்து வடமேற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 30 முதல் தடயவியல் குழுக்கள் அந்த இடத்தில் பணியாற்றி வருவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள உடல்களை அடையாளம் காண அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இராபுவாடோவில் ஒரு தெரு விருந்தில் நடந்த ஒரு பெரிய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சக்திவாய்ந்த ஜாலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல் உள்நாட்டு சாண்டா ரோசா டி லிமா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் போராடுவதால், குவானாஜுவாடோ சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான வன்முறையை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.