ஹமாஸ் தாக்குதலில் 31 பிரெஞ்சு மக்கள் பலி

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் 31 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.
கொல்லப்பட்டவர்களின் விபரங்களையும், காணாமல் போனவர்களின் விபரங்களையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சேகரிக்க முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
35 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஒன்பது பேர் காணாமல்ன்போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களில் சிலர் ஹமாஸ் இயக்கத்தினரால் பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)