மியன்மாரில் சுரங்க மண்சரிவில் சிக்கி 30 பேர் மாயம்!
மியன்மாரில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 30 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
மண்சரிவு மியன்மாரின் வடபகுதி கச்சின் மாநிலத்திலுள்ள, ஜேட் எனும் பச்சைக்கல் சுரங்கமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஏரியொன்றுக்கு அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மீட்புக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை மியன்மாரில் இதே பகுதியில் 2020ம் ஆண்டு மண்சரிவினால் 162 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)





