ஐரோப்பா

இன்னும் 30 நாட்கள் – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 30 நாட்களே உள்ளது.

இந்த நிலையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் மைதானங்களின் கட்டுமானம் மற்றும் சீரமைப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இரு நூறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 500 வீரர் வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் 35 மைதானங்கள் தயாராகியுள்ளன.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 ஆயிரம் பத்திரிகையாளர்களும், 45 ஆயிரம் தன்னார்வலர்களும் வருகை தரவுள்ளதால் தங்குமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போட்டி தொடக்கவிழா நடைபெறும் ஈஃபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்