வட அமெரிக்கா

படுக்கையில் கொடூரமாக கிடந்த 3 வயது சிறுவன்- அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்

அமெரிக்காவில் 3 வயது சிறுவன் கவனிப்பாரற்று கொடூரமாக , உயிரிழந்து கிடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடோ மகாணத்திலுள்ள பார்டோவ் என்ற பகுதியில், தகேஷா வில்லியம்ஸ்(24) மற்றும் எஃப்ரெம் ஆலன் ஜூனியர்(25) ஆகியோர் தம்பதியினராக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த மே 12 அன்று புளோரிடாவின் பார்டோவில் உள்ள அவர்களது வீட்டில், சிறுவனின் சடலத்தை பொலிஸார் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் புண்களுடன், பயங்கரமான நிலையில் படுக்கையில் இறந்து கிடந்திருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பின்னர் இது தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில், தம்பதியனர் தங்களது மகனை சரியாக கவனிக்காமல் இருந்ததால், பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

படுக்கையில் கொடூரமாக உயிரிழந்து கிடந்த 3 வயது சிறுவன்: சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார்

 

கடந்த 2020 ஆம் ஆண்டு தகேஷா மற்றும் ஆலன் ஆகியோர் தங்கள் குழந்தைகளோடு, சுற்றுலா தளத்திற்று சென்றிருந்த போது, குழந்தை தவறி குளத்தில் விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து குழந்தையை மீட்ட பெற்றோர், நோய்வாய்ப்பட்ட சிறுவனை சரியாக கவனிக்காமல் இருந்திருக்கின்றனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனது மகனுக்கு உடல் நிலை மோசமாக இருப்பதாக, அவரது தாய் அவசர சிகிச்சைக்கு அழைத்து கூறியுள்ளார். பின்னர் அங்கு வந்த பார்த்த மருத்துவர்கள், சிறுவனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனே பொலிஸாருக்கு புகார் அளிக்க, அங்கு வந்த பொலிஸார் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுவனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து சிறுவனின் இறப்பிற்கு காரணமான தம்பதியினரை, பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.பின்னர் அவர்களது மற்ற இரண்டு குழந்தைகளை மீட்ட பொலிஸார், அவர்களை குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி பராமரித்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!