காசா உச்சிமாநாட்டிற்கு முன்பு எகிப்தில் கார் விபத்தில் 3 கத்தார் அதிகாரிகள் பலி
எகிப்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கார் விபத்தில் கத்தார் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.
காசா அமைதி ஆலோசனை கூட்டம் நடைபெறும் ஷார்ம் எல் ஷேக் நகரின் ரெட்சி ரெசாட் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது.
விபத்தில் காயமடைந்த இரு அதிகாரிகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் விபத்தில் சிக்கிய கத்தார் அதிகாரிகள், நாளை நடைபெறும் காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களா அல்லது ஹமாஸ் ஆயுதக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றவர்களா என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த விபத்து தொடர்பாக எகிப்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)





