அமெரிக்காவுக்கு ஆதரவாக 3 ஐரோப்பிய நாடுகள் களத்தில்!
ஈரான் நடத்திவரும் ஏவகணைத் தாக்குதல்களை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
மேற்படிதாக்குதல்கள் நியாயமற்றவை எனக் குறிப்பிட்டுள்ள ஐரோப்பியத் தலைவர்கள், பிராந்தியத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் மூன்று ஐரோப்பிய நாடுகளும் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
பிரிட்டன் பிரதமர் தனது நாட்டின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன், கட்டாரை நோக்கி பாய்ந்த ஈரானின் ஏவகணையொன்றை பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.




