வங்கதேசத்தில் 28 வயது இந்து ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை
வங்கதேசத்தில்(Bangladesh) இந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இந்து சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்களில் இது சமீபத்தியது.
பாதிக்கப்பட்டவர் 28 வயது சமீர் தாஸ்(Sameer Das) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிட்டகாங்கில்(Chittagong) உள்ள தகன்பூயானில்(Dhakhangbhuyan) இரவு இந்த கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கொலைக்குப் பிறகு குற்றவாளிகள் அந்த நபரின் ஆட்டோ ரிக்ஷாவைத் திருடி சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.
“சமீர் நாட்டு ஆயுதங்களால் தாக்கப்பட்டுளளார். முதல் பார்வையில், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலையாகத் தெரிகிறது. மேலும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்” என்று தகன்பூயானாவில் உள்ள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ஜனவரி 10ம் திகதி சுனம்கஞ்ச்(Sunamganj) மாவட்டத்தில் ஜாய் மகாபத்ரோ(Joy Mahapatro) என்ற இந்து நபர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி





