மியான்மர் சைபர் கிரைம் முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 27 பேர் இலங்கை வருகை
மியன்மாரில் மனித கடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பெண்கள் உட்பட 27 பிரஜைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 405 இல் கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ளனர். சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் அதிகாரிகள் தனிநபர்களை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மனித கடத்தல் நெட்வொர்க்குகளுடன் தொடர்புடைய சட்டவிரோத சைபர் கிரைம் நடவடிக்கைகளில் சிக்கினர்.
மியன்மாரில் இதேபோன்ற முகாம்களில் 14 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும், அவர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் தாய்லாந்து தூதரக அதிகாரிகள், மியான்மர் மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முயற்சிகளை அரசாங்கம் தொடங்கியது.