மெக்சிகோவில் வாகன விபத்தில் 26 பேர் பலி!

வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்றுடன், லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் வேன், மற்றும் லொறி ஆகிய இரண்டு வாகனங்கள் தீபிடித்து எரிந்தன. இதில் வேனில் பயணித்த 26 பேர் பலியாகியுள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)