கஜகஸ்தான் சுரங்கத் தீ விபத்தில் 25 பேர் பலி
கஜகஸ்தானில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஜகஸ்தானில் உள்ள ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தேசியமயமாக்க விரும்புவதால், அதில் முதலீடு செய்வதை நிறுத்த உத்தரவிட்ட அதே நாளில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 23 பேர் காணாமல் போயுள்ளதாகவும், காயமடைந்த 18 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தின் போது, சுரங்கத்தில் 252 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். கஜகஸ்தானில் 15 சுரங்கங்களை ஆர்சிலர் மிட்டல் வைத்துள்ளது.
கஜகஸ்தான் அரசாங்கம் 02 மாத காலப்பகுதிக்குள் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கங்களில் இருந்து இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியதன் காரணமாக நிறுவனத்தின் முதலீடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.