தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக இணைந்த போரிஸ் ஜோன்சன்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜிபி நியூஸில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தி சேனலில் தொகுப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே அந்தத் தேர்தல்களை உள்ளடக்கியதில் அவர் “முக்கிய பங்கு” வகிப்பார், மேலும் போரிஸ் ஜோன்சன் தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி “பிரித்தானியாவின் சக்தியை உலகம் முழுவதும் வெளிப்படுத்துவார்” என்று ஜிபி நியூஸ் தெரிவித்துள்ளது.
தற்போது டெய்லி மெயில் நாளிதழில் பத்தி எழுதும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஜோன்சன், புதிய வருடத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்குவார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.