கனடா ஆசைக்காட்டி 25 கோடி ரூபா மோசடி!!! யாழ் விமான நிலையம் வந்தவர் கைது

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 25 கோடிக்கு மேல் மோசடி செய்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த இவர் வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப ஏஜென்சி நடத்தி அதன் மூலம் இந்த பண மோசடியை செய்துள்ளார்.
இந்தியா செல்வதற்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)