இந்தியாவின் அரசு மருத்துவமனையில் ஒரேநாளில் 24 நோயாளர்கள் உயிரிழப்பு!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு நடத்தும் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பிறந்த குழந்தை உள்பட குறைந்தது 24 நோயாளிகள், உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 70 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம், மும்பையிலிருந்து 25 கிலோமீட்டர் (கிமீ) தொலைவில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மரணங்கள் அனைத்தும் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)





