226 மில்லியன் டொலர் சம்பளம் வாங்கிய சுந்தர் பிச்சை
Google தேடுதளத்தின் மூல நிறுவனமான Alphabet Incஇன் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு சம்பள விபரம் வெளியாகியுளளது.
அதற்கமைய, கடந்த ஆண்டு அவர் சுமார் 226 மில்லியன் டொலர் மதிப்பிலான சம்பளத்தை வாங்கியதாக
நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
செலவுக்குறைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சராசரி ஊழியரின் சம்பளத்துடன் ஒப்புநோக்க 800 மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளது!
உலகளவில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் வேளையில் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.
இம்மாதத்தின் முற்பகுதியில் Googleஐ சேர்ந்த ஊழியர்கள் ஆட்குறைப்பின் காரணமாக லண்டனில் இருக்கும் அலுவலகங்களில் வெளிநடப்பு நடத்தினர்.
கடந்த மாதம் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையை இழந்ததால் ஸூரிக்கில் (Zurich) இருக்கும் அலுவலகங்களில் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர்.