குஜராத்தில் தொலைபேசி வாங்க மறுப்பு தெரிவித்த கணவர் – 22 வயது பெண் தற்கொலை
குஜராத்தின்(Gujarat) ஆரவல்லி(Aravalli) மாவட்டத்தில், 22 வயது புலம்பெயர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தைச்(Nepal) சேர்ந்த ஊர்மிளா கானன் ரிஜான்(Urmila Kanan Rijan) என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மொடசாவில்(Modasa) வசித்து வந்தார். இந்த தம்பதியினர் அப்பகுதியில் ஒரு சிறிய சீன உணவு வணிகத்தை நடத்தி வாழ்க்கை நடத்தி வந்தனர்.
ஊர்மிளா தனது கணவரிடமிருந்து புதிய தொலைபேசி கேட்டு வந்தார். நிதி நெருக்கடி காரணமாக, அவர் பலமுறை மறுத்ததால், தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறில் ஏற்பட்ட கோபத்தில், ஊர்மிளா பவன்பூர்(Bhavnagar) அருகே உள்ள தங்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.




