இலங்கை: பேருந்து விபத்தில் சிக்கி 22 ராணுவ வீரர்கள் படுகாயம்

நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமல சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
நிட்டம்புவவிலிருந்து கிரிந்திவெல நோக்கி இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிர்திசையில் பயணித்த லொறியின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் இருந்த பஸ் சாரதி உட்பட 22 இராணுவ வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருபது (20) படையினர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், ஒரு இராணுவ சிப்பாய் மற்றும் பேருந்தின் சாரதி ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)