ரஷ்யா காட்டுத்தீயால் 21 பேர் உயிரிழப்பு!

ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது.
இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)